Tuesday, 3 June 2014

இயற்கை கவிதைகள்

மரம் 
மரம் மனிதனுக்கு 
கிடைத்த 
மகத்தான 

வரம் .





மலர்களே 
மலர்களே ..... 
ஒரு நாளிலே வாழ்ந்து 
இந்த மண்ணில் - மடிகின்றோம் 

என்று நினைக்காதே -ஏனென்றால் 
மற்றவர்களின் புன்னகையை 
பறித்து கொண்டேதான் [ விழுகிறாய் ] 
மடிகிறாய் இந்த உலகில் ............




நிலவே 

 ஒளிசிந்தி விண்மீன்கள் உள்ளத்தை ஈர்க்கும் 
களிப்புடனே கண்சிமிட்டிக் காட்டும் - நளினமாய் 
பஞ்சுமுகி லுள்நுழைந்து பாசாங்கு செய்திடும் 

மஞ்சோட மெல்லெழும்பும் காண 

அழகு 
 இயற்கை அழகை புரியவைக்க சொற்களை தொடுத்து கோர்க்கிறேன் கவிதைகளாக. 
படித்தால் செவிகள் அறியும். 
வெற்றுக் காகிதத்தில் தீட்டுகின்றேன் ஓவியமாக. 

காணாதவர்கள் கண்டால்,விழிகள் அறியும்




 வானவில் 
  வானில் 
 ஏழு நிறங்களாய் 
 அர்ஜுனன் வளைத்த வில்


2 comments: